காதலர் தின ஸ்பெஷல் : ஒரே நாளில் வெளியாகும் 10 திரைப்படங்கள்!
காதலர் தினத்தை முன்னிட்டு, ஒத்த ஓட்டு முத்தையா, 2கே லவ் ஸ்டோரி, Fire, காதல் என்பது பொதுவுடைமை உள்ளிட்ட 10 படங்கள் வெளியாகவுள்ளன.

சென்னை : காதலர் தினமான வருகின்ற பிப்ரவரி 14 அன்று தமிழ் சினிமாவில் இருந்து ஒத்த ஓட்டு முத்தையா, 2கே லவ் ஸ்டோரி, Fire, காதல் என்பது பொதுவுடைமை உள்ளிட்ட 10 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது. இருப்பினும், இதில் சில படங்களின் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒரே நாளில் வெளியாகும் 10 திரைப்படங்கள்
- ஒத்த ஓட்டு முத்தையா
- 2கே லவ் ஸ்டோரி
- ஃபயர்
- அது வாங்கினால் இது இலவசம்
- தினசரி
- படவா
- காதல் என்பது பொதுவுடைமை
- கண் நீரா
- 9 ஏஎம் 9 பிஎம்
- தமிழ் டப்பிங் படமான ‘கேப்டன் அமெரிக்கா’
காதல் என்பது பொதுவுடைமை
ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் வினீத், ரோகிணி, லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘காதல் என்பது பொதுவுடைமை’ (KEPU) பிப்ரவரி 14, 2025 அன்று காதலர் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படம், காதலில் உள்ள மிக முக்கியமான உளவியல் பிரச்சனையைப் பற்றி பேசக்கூடிய படமாகும். இந்த படம் 2023 ஆம் ஆண்டு 54வது சர்வதேச திரைப்பட விழாவின் இந்திய பனோரமாவிற்கு அதிகாரப்பூர்வ தேர்வானது குறிப்பிடத்தக்கது.
ஒத்த ஓட்டு முத்தையா
பழம்பெரும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் வரவிருக்கும் அரசியல் நையாண்டி படமான ‘ஒத்த வோட்டு முத்தையா’ படத்தில் கவுண்டமணி, ஓ.ஏ.கே.சுந்தர், யோகி பாபு தவிர, மொட்டை ராஜேந்திரன், சந்தான பாரதி, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து, சேந்திரன், பயில்வான் ரங்கந்தன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் பிப்ரவரி 14, 2025 அன்று காதலர் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படவா
நீண்ட காலமாக தள்ளிப்போடப்பட்ட படமான ‘படவா’ திரைப்படத்தில் விமல் மற்றும் சூரி நடித்துள்ளனர். தயாரிப்பாளர்கள், கடந்த ஆண்டு அக்டோபரில் படம் வெளியாகும் என்று அறிவித்த நிலையில், சில காரணமாக அப்போது ரிலீசாகவில்லை. இதனால், இப்படம் பிப்ரவரி 14 ஆம் தேதி சுசீந்திரனின் 2K லவ் ஸ்டோரியுடன் வெளியாகிறது.
ஃபயர்
தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே இயக்கத்தில் உருவான முதல் படமான ‘ஃபயர்’ பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்பொழுது பிப்ரவரி 14 ஆம் தேதிக்கு வெளியவதாக படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2K லவ் ஸ்டோரி
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ‘2K லவ் ஸ்டோரி’ திரைப்படம் பிப்ரவரி 14, 2025 அன்று வெளியாகிறது. புதுமுகங்கள் ஜெகவீர் மற்றும் மீனாட்சி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில், பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், சிங்கமுத்து, வினோதினி மற்றும் ஜிபி முத்து ஆகியோர் துணை நடிகர்களாக நடிக்கின்றனர்.