ஹ்ரித்திக் ரோஷன் என்றால் முத்த காட்சியில் நடிக்க தயார் நடிகை தமன்னா
நான் படங்களில் முத்தக் காட்சியில் நடிப்பது இல்லை. ஆனால் ரித்திக் ரோஷனாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று தோழிகளிடம் ஜோக்கடிப்பேன். அவருடன் மட்டும் முத்தக் காட்சியில் நடிப்பேன்” என தமன்னா தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை தமன்னா.இவர் தமிழில்”கேடி”திரைப்படம் மூலம் அறிமுகமானார்.அதன் பின்பு தமிழில் பிரபல நடிகர்களான விஜயுடன் “சுறா” படத்திலும், அஜித்துடன் “வீரம்” படத்திலும், கார்த்தியுடன் “சிறுத்தை” படத்திலும் நடித்து உள்ளார்.
இந்நிலையில் நடிகர் பிரபுதேவா உடன் “தேவி” என்ற படத்தில் நடித்தார்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு மற்றும் வசூலும் செய்தது. இப்படத்தை தொடர்ந்து “தேவி” படத்தின் பாகம் இரண்டு உருவாகியுள்ளது.
பாகம் இரண்டில் கதாநாயகிகளாக தமன்னா, நந்திதா ஸ்வேதா நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்து.இந்த இரண்டு பாகத்திலும் இயக்குனராக விஜய் இயக்கியுள்ளார்.நடிகராக பிரபுதேவா நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் நடிகை தமன்னா, “நான் படங்களில் முத்தக் காட்சியில் நடிப்பது இல்லை. ஆனால் ரித்திக் ரோஷனாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று தோழிகளிடம் ஜோக்கடிப்பேன். அவருடன் மட்டும் முத்தக் காட்சியில் நடிப்பேன்” என தமன்னா தெரிவித்துள்ளார்.