ஹிந்தி பட ரீமேக்கில் ஜெயம் ரவி…!!
ஜெயம் ரவி தனி ஒருவன் படத்திற்கு பிறகு வெற்றியை தக்க வைக்க பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது படம் “டிக் டிக் டிக்” வெளிவரும் முன்னரே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வந்த தகவலின் படி பொலிவுட்டில் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘பேபி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை மனிதன் பட இயக்குனர் அஹமத் தான் இயக்குகிறார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.