தென்னிந்திய சினிமாவுக்கு கோலிவுட் ஹீரோயின்களில் ஒரு சில நடிகைகள் இந்தி படங்களில் நடித்தாலும் தாக்குபிடிக்க முடியாமல் மீண்டும் திரும்பினர்.
ஆனால் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் அடுத்தடுத்து நடித்ததுடன் இசை அமைப்பாளர், பாடகி என பிற பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார் ஸ்ருதிஹாசன். கடந்த 1 வருடமாக அவர் எந்த படமும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார்.
சுந்தர்.சி இயக்கத்தில், ‘சங்கமித்ரா’ படத்தில் டைட்டில் வேடத்தில் நடிக்க கடந்த ஆண்டு ஒப்புக்கொண்டவர் அதற்காக வாள் பயிற்சியும் பெற்றார். ஆனால் திடீரென்று அப்படத்திலிருந்து விலகினார்.
தந்தை கமலுடன் நடிப்பதாக இருந்த ‘சபாஷ் நாயுடு’ படமும் முதல்கட்ட படப்பிடிப்போடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் லண்டன் பாய்பிரண்ட் மைக்கேல் கோர்சேலுடன் டேட்டிங்கில் ஈடுபட்டார். அது தொடர்கிறது.
ஸ்ருதிஹாசன் விலகிய ‘சங்கமித்ரா’ படத்தில் தற்போது திஷா பதானி நடிக்கிறார். இவர் இந்தியில் டோனி வாழ்க்கை படமான, ‘எம்.எஸ்.டோனி தி அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தில் நடித்தவர்.
ஏற்கனவே ஆர்யா, ஜெயம் ரவி ‘சங்கமித்ரா’ படத்தில் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டிருக்கின்றனர். மன்னர் கெட் அப் அணிந்து சமீபத்தில் அவர்கள் ஒத்திகை பார்த்தனர்.
ஸ்ருதிஹாசன் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தாலும் இணைய தள டுவிட்டர் பக்கத்தில் எந்த நடிகையும் எட்டாத அளவுக்கு 70 லட்சம் ஃபாலேயர்களை பெற்று சாதனை படைத்திருக்கிறார்.
இந்த ஆண்டில் அவர் மீண்டும் படத்தில் நடிக்க வருவார் என்பதற்கு அறிகுறியாக இந்தியில் வித்யூத் ஜம்வல் உடன் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…