ஹைதராபாத் குற்றப்பிரிவு போலீஸார் தெலுங்கு திரையுலக பிரபலங்களின் ரகசியங்களை வெளியிடுவதாக கூறிய நடிகை ஸ்ரீரெட்டி மீது நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.
தெலுங்கு திரைப்பட நடிகை ஸ்ரீரெட்டிசில தெலுங்கு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக அவருக்கு எந்த சினிமா வாய்ப்புகளும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீரெட்டி, சில தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சினிமா வாய்ப்புகள் வழங்குவதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்கள் என தொலைக்காட்சிகளில் பகிரங்கமாக தெரிவித்தார்.மேலும், தெலுங்கு பேசும் நடிகைகளை உல்லாசத்துக்கு மட்டுமே உபயோகித்துவிட்டு சில இயக்குநர்கள் ஒதுக்கிவிடுவதாகவும் அவர் கூறினார்.