ஸ்ரீரெட்டியை அடுத்து உண்மையை உடைத்த தமிழ் நடிகை..!
தமிழ் நடிகைகளில் ஒரு சில நடிகைகளிலே தனது கதாபாத்திரம் கதையோடு வலுவாக இருக்க வேண்டும் என்று நிதானமாக தேர்ந்தெடுத்து நடிப்பார்கள். அந்த வகையில் காக்க முட்டை, தர்மதுரை போன்ற படங்களில் தனது யதார்த்த நடிப்பால் பலரை கவந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவர் தற்போது துருவ நட்சத்திரம் , வடசென்னைம் செக்க செவந்த வானம் போன்ற பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார். இதுபற்றி அவர் கூறுகையில்; வடசென்னை படத்தில் லோக்கல் ஸ்லாம் பெண்ணாக நடித்திருக்கிறேன், சென்னையிலே பிறந்து வளர்ந்ததால் லோக்கல் சென்னை பாஷை பேச ஈஸியாக இருந்தது, கவுதம்மேனனின் துருவ நட்சத்திரம் படத்தில் ஆரம்பத்தில் நடிப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, அதன் பின் அவரின் ஸ்டைலை பின்பற்றி நடித்தேன்.
குறிப்பாக மணி சார் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எதுவும் சொல்ல முடியாது, ஆனால் அவர் படத்தில் ஒரு காட்சியாக இருந்தாலும் நடித்திருப்பேன், எனது சினிமா வாழ்க்கையில் மணி சார் படத்தில் நடிப்பது பெரிய விஷயமாக கருதுகிறேன். மணி சார் எனக்கு பலம்வாய்ந்த கதாபாத்திரம் தான் கொடுத்திருக்கிறார் என்று கூறினார்
மேலும் சாமி 2 படத்தின் நான் நடித்திருக்க வேண்டும்.ஆனால் சில காரணங்களுக்காக நான் நடிக்கவில்லை. சினிமாவில் தமிழ் பொண்ணுக நடிக்க வந்த யாரும் மதிக்கவில்லை என்றும் கூறினார் ..!