ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக புள்ளிவிவரங்களோடு களத்தில் சந்திப்போம்…!
புள்ளிவிவரங்களோடு களத்தில் சந்திப்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க தூத்துக்குடி வருகிறார்.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 48 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், மக்கள் விரும்பினால் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நான் ஆதரவாக களமிறங்க தயார் என்று கமல் அறிவித்திருந்தார்.
இதன் பிறகு போராட்டக் குழுவினர் அவரை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தரும்படி அழைப்பு விடுத்தனர். இதனால் இன்று (ஏப்ரல் 1) கமல் ஹாசன் தூத்துக்குடிக்கு வருகிறார். குமாரரெட்டிபாளையத்தில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கும் கமலுக்கு, வகைகளும் விமான நிலையத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.
இந்நிலையில் புள்ளிவிவரங்களோடு களத்தில் சந்திப்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது என அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.