ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி மறுத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு வாழ்த்துகள் என மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
இதற்கு முன் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில், ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தைப் புதுப்பிக்கக் கோரி சமர்ப்பித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உறுதி செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளை நிறைவேற்றாததால் ஆலை இயக்க கோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் கிராமத்தில் இயங்கி வரும் வேதந்தா குழுமத்தைச் சேர்ந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அலகு-1ஐ 31.3.2018-க்கு பிறகு தொடர்ந்து நடத்துவதற்கு விண்ணப்பித்திருந்தது. அவ்விண்ணப்பத்தை பரிசீலித்தபோது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை, அக்குழுமம் சரிவர நிறைவேற்றவிலை என்ற காரணத்தினால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேதாந்தா குழுமத்தின் விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்த தகவலை தேசிய பங்குச்சந்தைக்கு கடிதம் மூலம் வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆலையின் உரிமம் புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்திருந்ததாகவும், கூடுதல் விவரம் கேட்டு அந்த விண்ணப்பத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்திருப்பதாகவும் கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலை நிர்வாகம் ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பராமரிப்புப் பணிக்காக 15 நாள்களுக்கு ஆலை மூடப்பட்டுள்ள நிலையில், உரிமம் புதுப்பித்தல் தொடர்பான நடவடிக்கைகளால் ஆலை திறப்புக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராடி வரும் நிலையில், ஆலையைத் திறப்பதற்கான உரிமம் புதுப்பிப்பதற்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலை மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி மறுத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு வாழ்த்துகள் என மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…