ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி மறுத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு வாழ்த்துகள் : கமல்ஹாசன்

Default Image

ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி மறுத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு வாழ்த்துகள் என மக்கள் நீதி மைய்யம் தலைவர்  கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

இதற்கு முன்  ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில், ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தைப் புதுப்பிக்கக் கோரி சமர்ப்பித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உறுதி செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளை நிறைவேற்றாததால் ஆலை இயக்க கோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் கிராமத்தில் இயங்கி வரும் வேதந்தா குழுமத்தைச் சேர்ந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அலகு-1ஐ 31.3.2018-க்கு பிறகு தொடர்ந்து நடத்துவதற்கு விண்ணப்பித்திருந்தது. அவ்விண்ணப்பத்தை பரிசீலித்தபோது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை, அக்குழுமம் சரிவர நிறைவேற்றவிலை என்ற காரணத்தினால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேதாந்தா குழுமத்தின் விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்த தகவலை தேசிய பங்குச்சந்தைக்கு கடிதம் மூலம் வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆலையின் உரிமம் புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்திருந்ததாகவும், கூடுதல் விவரம் கேட்டு அந்த விண்ணப்பத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்திருப்பதாகவும் கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலை நிர்வாகம் ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பராமரிப்புப் பணிக்காக 15 நாள்களுக்கு ஆலை மூடப்பட்டுள்ள நிலையில், உரிமம் புதுப்பித்தல் தொடர்பான நடவடிக்கைகளால் ஆலை திறப்புக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராடி வரும் நிலையில், ஆலையைத் திறப்பதற்கான உரிமம் புதுப்பிப்பதற்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலை மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில்  ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி மறுத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு வாழ்த்துகள் என மக்கள் நீதி மைய்யம் தலைவர்  கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்