ஷங்கரின் இந்தியன் 2 விலும் வில்லன் அக்ஷ்ய்குமாரா?!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமாரை வைத்து 2.O எனும் பிரமாண்ட படத்தை இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் நவம்பர் 29 ஆம் தேதியன்று திரைக்கு வர உள்ளது.
இதனை அடுத்து இயக்குனர் ஷங்கர் உலகநாயகனை வைத்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இப்படமும் பாலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற 2.O போலவே பாலிவுட் நடிகரை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க இயக்குனர் முடிவெடுத்துள்ளார்.
ஆதலால் இந்தியன் 2 வில் நடிக்க முதலில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது வந்த தகவலின்படி 2.O வில் வில்லனாக நடித்துள்ள அக்ஷ்ய்குமாரையே இந்தியன் 2விலும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக செய்தி கோலிவுட்டில் உலா வருகிறது. எது உண்மை என படக்குழுவிலிருந்து அறிவிப்பு வெளிவந்தால்தான் தெரியும்.
source : cinebar.in