Categories: சினிமா

வையகத்தை கலக்கிய..'வைக்கம் விஜயலட்சுமிக்கு' கல்யாணம்…….அட வாழ்த்துங்கப்பா…!!!

Published by
kavitha
வையகத்தை கலக்கிய பிரபல பின்னணிப் பாடகியான வைக்கம் விஜயலட்சுமி திருமணம் இன்று கேரளாவில் நடைபெற்றது.
Image result for vaikom vijayalakshmi
கேரளவில் வைக்கம் என்ற ஊரில் பிறந்தவர் விஜயலட்சுமி. பிறக்கும்போதே மாற்றுத்திறனாளியாகப் பிறந்த இவர், கர்நாடக இசை பயின்றவர். இதுமட்டுமில்லை, ஒற்றை நரம்பை மட்டுமே கொண்டு வாசிக்கப்படும் காயத்ரி வீணையை வாசிப்பதிலும் வல்லவர் வைக்கம் விஜயலட்சுமி. கிடைப்பதற்கே மிகவும் அரிதான இந்த இசைக்கருவியை, அவ்வளவு எளிதாக யாரும் வாசித்துவிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த விஜயலட்சுமி என்ற கேட்பவருக்கு தன் ‘செல்லுலாய்டு’ என்ற மலையாளப் படத்தில் வைக்கம் இவர் பாடிய ‘காட்டே காட்டே’ பாடல், அவருக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது. இந்தப் பாடலுக்காக கேரள அரசின் விருதையும்  சினிமாவில் தன்னுடைய குரலால் சிறப்புக் கவனம் பெற்றார். அதன்பிறகு மலையாளம் மற்றும் தமிழில் ஏகப்பட்ட பாடல்கள் பாடி ரசிகர்களால் கிரும்பப்பட்ட பாடகியாக மாறினார்.
இவர் த்மிழில் பாடிய முதல படல் இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான ‘குக்கூ’ படத்தில் இடம்பெற்ற ‘கோடையில மழ போல’ பாடல்தான் தமிழில் வைக்கம் விஜயலட்சுமி பாடிய முதல் பாடலாகும். அதன்பின் ‘என்னமோ ஏதோ’, ‘வெள்ளக்கார துரை’, ‘தெறி’, ‘வீர சிவாஜி’ என பல படங்களில் பாடியுள்ளார்.
ஊனம் ஒரு குறையில்லை வாழ்விற்கு முயற்சியே முலதனமாக கொண்டு செயல்பட்டவர்  வைக்கம் விஜயலட்சுமிக்கும் இவருக்கும் மிமிக்ரி கலைஞரான கேரளாவைச் சேர்ந்த அனூப் என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது.



பாடகி விஜயலட்சுமியின் குடும்ப நண்பரான அனூப், இன்டீரியர் டிசைனர். கடந்த செப்டம்பர் 10-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இன்று (அக்டோபர் 22) திருமணம் நடைபெற்றது.விஜயலட்சுமியின் பிறந்த இடமான வைக்கமில் உள்ள மஹாதேவா கோயிலில், கேரள பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.அவருக்கு நீங்களும் உங்கள் வாழ்த்தை தெரிவியுங்கள்.
DINASUVADU

Recent Posts

மகாராஷ்டிரா முதல்வர் யார்? தேர்தல் முடிவுக்கு முன்பே வெடித்த சர்ச்சை?

மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…

5 minutes ago

இன்று ரிசல்ட்! 2 மாநில சட்டப்பேரவை! 2 மக்களவை! 48 சட்டமன்ற தொகுதிகள்! முழு விவரம் இதோ…

டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…

54 minutes ago

மணிப்பூரில் அதிகரிக்கும் பதற்றம்! கூடுதலாக 90 ராணுவ அமைப்புகள் குவிப்பு!

இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…

1 hour ago

10, 12ஆம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு எப்போது? முழு விவரம் இதோ…

சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.  முதலில்…

2 hours ago

மாணவர்களுக்கு குட் நியூஸ்! தென்காசியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…

2 hours ago

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…

11 hours ago