Categories: சினிமா

வெளியானது விஜய் 62 படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Published by
Dinasuvadu desk
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜூன் 21-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு அமெரிக்கா செல்லவிருக்கிறது. விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இதில், சமகால அரசியல் மற்றும் சமூகத்தின் முக்கிய பிரச்சனைகளை அலசியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அரசியல் சம்பந்தமாக உருவாகும் இந்தப் படத்தில் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பழ.கருப்பையா, ராதாரவி இருபெரும் அரசியல் தலைவர்களாக நடிக்கின்றனர். ஜூலை மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
விஜய் தனது பிறந்த நாளை ஜூன் 22-ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில், படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு ஒரு நாள் முன்னதாக ஜூன் 21-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
Published by
Dinasuvadu desk

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

3 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

3 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

3 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

3 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

3 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

3 hours ago