ரஜினி நடித்த காலா படம் ஜூன் மாதம் 7 – ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட்வர்களை நேரில் சந்தித்த ரஜினிகாந்த் சமூக விரோதிகள் தான் துப்பாக்கிச்சூட்டிற்கு காரணம் என பேட்டியளித்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு பல தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதையடுத்து ரஜினியின் காலா படத்தை நார்வேயில் திரையிடமாட்டோம் என நார்வே தமிழ்த் திரைப்பட
விநியோகஸ்தர் குழுவின் நிர்வாக உறுப்பினர் அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் தூத்துக்குடி சம்பவத்திற்கு பிறகு இனிமேல் தமிழர்களை, தமிழினத்தை கொச்சைப்படுத்தும் எந்த நடிகர்களின் திரைப்படத்தையும், திரையிடமாட்டோம் என உறுதி கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நார்வேயைத் தொடர்ந்து தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடான சுவிட்சர்லாந்திலும் காலா படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளியாக இன்னும் 1 வாரமே உள்ள நிலையில் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து காலா பட வெற்றிக்கு எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…