விஸ்வாஸம் படத்தில் அஜித்திற்கு இரண்டு ஜோடிகள் ..!
ராஜா ராணியில் ஒரு சின்ன வேடம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் சாக்ஷி அகர்வால். தொடர்ந்து சின்ன சின்ன படங்களில் நடித்தவர் காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்திருக்கிறார்.
ரஜினியுடன் நடிப்பதை தொடர்ந்து, அடுத்ததாக அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் இணைந்திருக்கிறாராம். சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதுவரை அஜித்தின் வயதான கதாபாத்திரத்துக்கான படப்பிடிப்பு நடந்தது.
அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக மும்பையில் விரைவில் துவங்க இருக்கிறது. அதில் அஜித் இளமையான தோற்றத்துக்கு மாற இருக்கிறார். அதில் சாக்ஷி அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இளமையான அஜித்துக்கு ஜோடியாக சாக்ஷி நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.