விஸ்வாசத்தை முடித்த அஜித் அடுத்து களமிரங்கி கலக்கிய குழுவை பாருங்க…!!!
விஸ்வாசத்தை முடித்த கையொடு தக் ஷா குழுவை சந்தித்த அஜித் அவர்களுடன் ஆளில்லா விமானத்தை இயக்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் , வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் அஜித் என்றால் நடிப்பு ஆனால் அதையும் தாண்டி அவருக்குள் புகைப்படக் கலை, பைக் ரேஸ் மற்றும் கார்ரேஸ் ஆகியவற்றில் கொள்ள பிரியம் மற்றும் அதிக கவனம் செலுத்திபவர். இப்பொழுது தான் விவேகம் படப்பிடிப்பு முடிந்தது படத்தை முடித்த கையொடு தனது தக் ஷா குழுவோடு ஆளில்லா விமானத்தை இயக்கி மகிழ்ந்துளார் இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸில் பயிலும் ஏரோநாட்டிகல் மாணவர்கள் ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய தக்ஷா என்னும் குழுவை உருவாக்கியது. இந்தக் குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.இது அவருடைய நடிப்பை தாண்டிய வல்லமையை எடுத்துறைக்கிறது.இதன் மூலம் ஆளில்லா விமானங்களை இயக்குவதிலும் அவர் வல்லுநர் என்பதை நிரூபித்துள்ளார்.
நடிகர் அஜித் ஆலோசகராக இருந்து பயிற்சியளித்த இந்த தக்ஷா குழுவானது ஆஸ்திரேலியாவில் நடந்த `Medical Express 2018 UAV Challenge’ போட்டியில் கலந்து கொண்டு சர்வதேசப் போட்டியில் குழுவுக்கு 2-ம் இடம் கிடைத்தது.
அந்த நிகழ்வின் போது நடிகர் அஜித் விஸ்வாசம் படப்பிடிப்பில் இருந்ததால் அவர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.ஆனால் தனது வாழ்த்துக்களை தனது குழுவிற்கு தெரிவித்தார்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விஸ்வாசம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தக்ஷா குழுவின் அடுத்த ட்ரோன் திட்டத்துக்காக எம்.ஐ.டி கல்லூரிக்கு வந்தார் நடிகர் அஜித். ட்ரோன் இயக்கும் பயிற்சியில் மாணவர்களுடன் அவர் இருக்கும் புகைப்படங்களும் அந்த ஆளில்லா விமானத்தை இயக்கும் வீடியோக்களும் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த ட்ரோன் திட்டம் என்பது இந்தியாவிலே முதல் முறையாக 1 நபரை சுமந்து செல்லும் ஆளில்லா விமானம் தான் (ட்ரோன்) சோதனை இதனை செய்வதற்காக நடிகர் அஜித் வந்திருந்ததாகவும் இந்தச் சோதனை வெற்றிகரமாக வெற்றி பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால் சர்வதேச போட்டியில் வெற்றி பெற்ற தக்ஷா குழு மீண்டும் ஒரு மைல் கல்லை நோக்கி செல்கிறது.
https://twitter.com/iammanoj_77/status/1061947162055991296