விஸ்வரூபம் 2 படத்தை வெளியிடுவதில் என்ன சிக்கல் வந்தாலும் எதிர்கொள்ளத் தயார்!கமல்ஹாசன்
இன்று மாலை 5 மணிக்கு கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்தின் 2ம் பாகத்திற்கான டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் முதல் பாகம் 2013ம் ஆண்டு வெளியான நிலையில்,
விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் டிரெய்லரை சென்னையில் கமல்ஹாசன் வெளியிட்டார். திரைப்படத்தின் தமிழ் டிரெய்லரை ஸ்ருதி ஹாசனும், தெலுங்கு டிரெய்லரை ஜூனியர் என்டிஆரும், இந்திப் பாகத்தின் டிரெய்லரை அமீர்கானும் வெளியிட்டனர். நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், படத்தை வெளியிடுவதில் சிக்கல் வந்தால் தான் ஓர் அரசியல்வாதியாக எதிர்கொள்ளத் தயார் என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.