ஸ்ருதிஹாசன் விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் லிங்கிற்குப் பதிலாக வேறு ஏதோ ஒரு லிங்கை ட்வீட் செய்து ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார்.
இன்று கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் ரிலீசானது.
இன்று மாலை 5 மணிக்கு கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் வெளியானது. இந்த டிரைலரை தமிழில் சுருதி ஹாசனும், இந்தியில் அமீர் கானும், தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர்-ம் வெளியிட்டனர். டிரைலருடன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்தது.
இந்த நிலையில், விஸ்வரூபம்-2 வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான், ஜெய்தீப் அலவாட், ரசல் கோபெஃர்ரி பேங்ஸ், தீபக் ஜேதி, மிர் சர்வார், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஆனால் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. அடுத்தடுத்த படங்கள் மற்றும் அரசியல் பிரவேசம் என அடுத்தடுத்த வேளைகளில் பிஸியாகியிருந்த கமல் தற்போது விஸ்வரூபம் 2 படத்தின் அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்து முடித்துள்ள நிலையில், இப்படத்தின் தமிழ் ட்ரெய்லரை இன்று மாலை 5 மணிக்கு ஸ்ருதிஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அப்போது படத்தின் ட்ரெய்லர் லிங்கிற்குப் பதிலாக வேறு ஏதோ ஒரு லிங்கை குறிப்பிட்டு விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் என ட்வீட் செய்துள்ளார் ஸ்ருதிஹாசன். இதனை க்ளிக் செய்து பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
பின்னர் அந்த லிங்கில் வீடியோ இல்லையென ரசிகர்கள் கமெண்ட் செய்ததையடுத்து ஸ்ருதிஹாசன் அந்த ட்வீட்டை டெலீட் செய்துவிட்டு மறுபடி சரியான லிங்கை ட்வீட் செய்தார்.ஸ்ருதி செய்த செயலால் ரசிகர்கள் கடுமையாக பாதித்தனர்.வீடியோவை பார்ப்பவர்களின் எண்ணிகையும் குறைந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…