விளம்பர படத்தில் நடித்து சிக்கலில் மாட்டிக்பொண்ட அமிதாப்
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் பல விளம்பரங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ஒரு தனியார் ஜிவல்லரி விளம்பரத்தில் நடித்தார், அதன் மூலம், இந்திய வங்கி அதிகாரிகளின் சங்கத்தின் கூட்டமைப்பில் (AIBOC) எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
அந்த வங்கி விளம்பரத்தில் ஒரு வயதான முதியவர் (அமிதாப்) தனது ஓய்வூதியத்தின் வங்கி கணக்கு விபரம் அறிய வங்கிக்கு தனது மகளுடன் (அமிதாப்பின் மகள்) வங்கிக்கு செல்கிறார், அப்போது அவர் ஓய்வூதியம் என ஆரம்பித்ததும் அணைத்து கவுண்டர்களிலும் தட்டி கழிக்கின்றனர். பிறகு வங்கி மேலாளரை பார்கிறார். அப்போது அந்த முதியவர் தனக்கு இந்த முறை இரண்டு முறை ஓய்வூதியம் வந்துள்ளதாக தெரிவிக்கிறார். அதற்க்கு மேலாளர் இதற்க்கு நீங்கள் பார்டி தான் வைக்கவேண்டும் என கூறுகிறார். ஆனால் முதியவரோ அது தப்பு என திரும்ப அந்த பணத்தை வங்கியில் செலுத்துவது போல விளம்பரம் முடியும்.
இதற்க்கு வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு சங்க பொது செயலாளர் கூறுகையில், ஏற்கனவே வெவ்வேறு காரணங்களால் வங்கிகளுக்கு கேட்ட பெயர் ஏற்பட்டுள்ளது, இந்த விளம்பரம் அதனை மேலும் தூண்டி விடுகிறது. எங்களுக்கு வாடிக்கையாளர் சேவையே எங்களுக்கு முக்கியம்’ என அவர் தெரிவித்தார்.
இதற்க்கு பதிலளிக்கும் விதமாக கல்யாண் ஜிவல்லர்ஸ் நிறுவனம், இந்த புகாரை ஏற்று, அந்த விளம்பரம் ஒளிபரப்பப்படும் போது, போருப்புதுரப்பு தெரிவிக்கும் வகையில் ,இந்த விளம்பரம் முழுவதும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்துவது இல்லை என வாசகங்கள் கிழே இடம் பெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தமிழ் பதிப்பில் நம்ம பிரபு நடிதிருப்ப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.