Categories: சினிமா

வித்தார்த் ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் ரேஷ்மா அன்னராஜன்..!

Published by
Dinasuvadu desk
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களுள் ஒருவர் வித்தார்த். இவரது நடிப்பில் வெளியான `ஒரு கிடாயின் கருணை மனு’, `குரங்கு பொம்மை’ போன்ற படங்கள் அவருக்கு பேசும்படியாக அமைந்தது. வித்தார்த் கடைசியாக `கொடிவீரன்’ படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது ராதா மோகன் இயக்கத்தில் ‘தும்ஹரி சுளு’ படத்தின் தமிழ் ரீமேக்கான `காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகாவின் கணவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அதேநேரத்தில், பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அறிவு இயக்கத்தில் ஒரு படத்திலும் வித்தார்த் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இந்த படத்தில் வித்தார்த் ஜோடியாக ரேஷ்மா அன்னராஜன் நடிக்கிறார். இவர் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான `அங்கமாலி டைரீஸ்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வித்தார்த்தின் `குரங்கு பொம்மை’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த உதயகுமார் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஜோஹன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ராம் – சதீஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கின்றனர்.
Published by
Dinasuvadu desk

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

8 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

16 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago