விஜய் ரசிகர்களின் மீது போலீஸ் தடியடியா..?…!!கொந்தளிக்கும் ரசிக பட்டாளம்…!!
நடிகர் விஜய் ,AR முருகதாஸ் நடிகை ,கீர்த்தி சுரேஷ் ,சன்பீக்சர்ஸ் என்ற பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார் இந்த படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.மேலும் தெலுங்கு,மலையாளம்,உள்ளிட்ட பிற மொழிகளிலும் சர்கார் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏகிறியுள்ளதை அவர்கள் வெளிப்படுத்தும் விதத்திலிருந்து நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.இதனிடையே நாளை வெளியாக உள்ள சர்கார் படத்திற்கு டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர்களிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுவருகிறது.
இதே போல் தான் காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள திரையரங்கில் டிக்கெட் வாங்குவதற்கு விஜய் ரசிகர்கள் ஆயிரகணக்கானோர் ஒரே நேரத்தில் மலமலவென குவிந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனை தவிர்க்க போலீசார் ரசிகர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.இதனால் ரசிகர்கள் சற்று கோபத்துடன் போலீசாருடன் வாக்குவதத்தில் ஈடுப்பட்டனர்.
DINASUVADU