விஜய் மீது முட்டையை அடித்த பிரபல நடிகர்- ஏன்?
விஜய் தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான ஒரு பெரிய நடிகர். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியாக இருந்தாலும் நடிப்பு என்று வந்துவிட்டால் தெறிக்கவிட்டு விடுவார்.
தமிழில் குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்கள் நடித்திருப்பவர் மகேந்திரன். இவரிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில், நீங்கள் மீண்டும் இந்த நடிகருடன் நடிக்கனுமே என்று ஆசைப்பட்டது யாருடன் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் விஜய் அவர்களுடன் என்று கூறியுள்ளார். மேலும் பேசும்போது, மின்சார கண்ணா படத்தில் விஜய் அவர்களின் காமெடி பக்கங்களை பார்த்திருக்கிறேன். அப்படத்தில் சமையல் அறையில் ஒரு சண்டை காட்சி இருக்கும், அதில் கையில் கிடைக்கும் முட்டைகளை நான் அவர் மீதே போட்டேன்.
படப்பிடிப்பு முடிந்ததும் நீ வேண்டும் என்றே தானே என் மீது போட்டாய் என்று ஜாலியாக கேட்டார். அப்பட சம்பவங்களை என்னால் மறக்க முடியாது என்று பேசியுள்ளார்.