விஜய் தமிழ்நாட்டை நிச்சயம் ஆள்வார்…!ஜெயலலிதாவிற்கே விஜய் பயப்பட மாட்டார் …!ராதாரவி உறுதி
ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக முன்னணி நடிகர் விஜய் நடிக்கிறார்.இந்த படத்திற்கு சர்கார் என்று பெயரிடப்பட்டுள்ளது.விஜய் பிறந்த ஜூன் 21 ஆம் தேதி படத்தின் முதல் தோற்றப் படம்(FIRST LOOK) வெளியிடப்பட்டது.
மேலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் உட்பட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.இந்த படத்தில் முக்கிய வேடத்தில் முன்னணி நடிகர் ராதாரவி நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் ராதாரவி சமீபத்தில் ஒரு போட்டியில் நடிகர் விஜய் குறித்து கூறியுள்ளார்.அவர் கூறுகையில்,5 அல்லது 6 வருடங்களில் நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்.நடிகர் விஜய் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் போதே பல்வேறு விஷயங்களை தைரியமாக செய்தார். அதனால் தான் ஜெயலலிதாவே நடிகர் விஜய்யை எதிர்த்தார்.நடிகர் விஜய் நிச்சயமாக புரட்சித்தலைவர் போல் நிச்சயமாக வருவார்.சில குணங்களை அதனால் அவரிடம் இருந்து எடுத்துகொள்ள வேண்டும்.விஜய் தமிழ் சினிமாவை ஆள்வது போல தமிழ்நாட்டையும் விரைவில் ஆள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.