விஜய் சேதுபதி ஒரு நாட்டு கட்டை ….
விஜய் சேதுபதி ஆம்பள நாட்டுக்கட்டை மட்டுமல்ல.. பொம்பள நாட்டுக்கட்டையும் கூட என்று டுவிட்டரில் பாராட்டு குவிந்து உள்ளது
தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள படமான சூப்பர் டீலக்ஸ் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது. அதில் அவர் பெண் வேடத்தில் உள்ளார்.
“இனி அவர் ஆம்பள நாட்டுக்கட்டை மட்டும் இல்லை.. பொம்பள நாட்டுக்கட்டையும் கூட” என நடிகர் அசோக் செல்வன் விமர்சித்துள்ளார். மேலும் டுவிட்டரில் பல பிரபலங்கள் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த 96 படத்தில் வரும் ஒரு வசனம் அதிகம் பிரபலமடைந்துவிட்டது. அது த்ரிஷா விஜய் சேதுபதியை பார்த்து ‘நீ ஆம்பள நாட்டுக்கட்டை’ என்று சொன்ன வசனம் தான்.
DINASUVADU