விஜய் சேதுபதியின் அடுத்த ரிலீஸ் : நவம்பர் 29 ஆம் தேதி மாலை 6 மணி
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படம் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ இதில் இவருடன் கெளதம் கார்த்திக் உடன் நடிக்கிறார். இதனை ஆருமுககுமார் எனும் அறிமுக இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நிகரிகா, ரமேஷ் திலக் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கான சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் நவம்பர் 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என இப்படத்தின் இன்னொரு ஹீரோ கெளதம் கார்த்திக் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.