விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ டீசர் வெளியீடு.! சத்யராஜ் – சரத்குமார் மிரட்டல் காட்சி.!

Mazhai Pidikkatha Manithan Teaser

விஜய் ஆண்டனி: நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ மிரட்டலான டீசர் கவனம் ஈர்த்துள்ளது.

இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என் அறிவித்தபடி, படக்குழு டீசரை வெளிட்டுள்ளனர். டீசர் முழுக்க ஆக்சன் – திரில்லர் நிறைந்து காணப்படுகிறது.

இது வரைக்கும் நாம் பார்க்காத விஜய் ஆண்டனி படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசர் என்ன மாதிரி கதைன்னு யூகிக்க முடியாத அளவிற்க்கு உள்ளது. காட்சிகளில் சத்யராஜ், சரத்குமார், விஜய் ஆண்டனி பிரேம்கள் மிரட்டலாக அமைந்த்திருக்கிறது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட படக்குழு மற்றும் நடிகர்கள் தங்களது படத்தில் நடித்தது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் இப்படத்தில் நடிகை மேகா ஆகாஷ், சத்யராஜ் தனஞ்சயா, ப்ருத்வி அம்பர், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய், சுரேந்தர் தாக்கூர், ப்ரணிதி, முரளி சர்மா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த படத்தை தவிர விஜய் ஆண்டனி கை வரிசையில், வள்ளி மயில், ஹிட்லர், அக்னிச் சிறகுகள் போன்ற திரைப்படங்கள் உள்ளது. இவர் கடைசியாக விநாயக் வைத்தியநாதன் இயக்கிய மிர்னாலினி ரவியுடன் காதல் கலந்த காமெடி திரைப்படமான ‘ரோமியோ’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk