விஜய்யை பார்த்து காப்பி அடிக்கிறேனா? வண்டி இல்ல.. சைக்கிளில் போனேன் – ஷாக் கொடுத்த விஷால்!

Vishal: தன்னிடம் வண்டி இல்லாததால் தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் போனேன் என்று ரத்னம் பட ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் தளபதி விஜய்யின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். விஜய்யின் ‘இளையதளபதி’ என்ற அடைமொழிக்குப் பிறகு ‘புரட்சி தளபதி’என்ற பெயருக்கு சொந்தக்காரர் விஷால் என்றே சொல்லலாம்.
பல விஷயங்களில் நடிகர் விஜய்யை விஷால் பாலோ செய்வதாக கருத்துக்கள் உண்டு. அந்த வகையில், விஜய்யின் அரசியல் வருகைக்கு பின் அவரும் அரசியலில் களமிறங்க இருப்பதாக தெரிவிப்பதாக இருக்கட்டும். இவ்வாறு பலவற்றில் விஜய்யுடன் விஷாலை ஒப்பிட்டு பேசி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2021 மாநிலத் தேர்தலின் போது தளபதி விஜய் சைக்கிளில் வாக்களிக்கச் சென்றது பரபரப்பாக பேசப்பட்டது. அதே பாணியில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு வாக்களிக்க விஷால் சைக்கிளில் வந்தார். இதனையடுத்து விஜய்யை பாலோ செய்து தான் இவ்வாறு செய்கிறார் என பேசப்பட்டது.
விஜய்யை பார்த்து காப்பி அடிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தநிலையில், இன்று சேலத்தில் நடைபெற்ற ரத்னம் பட ப்ரீ ரிலீஸ் நிகழ்வி போது, வண்டி இல்லாததால் தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் சென்றேன். அப்பா, அம்மாவிடம்தான் வாகனம் உள்ளது, இங்குள்ள மோசமான சாலையில் வண்டியில் போவது கஷ்டம் என்று கூறி விளக்கமளித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025