நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் இருவரும் மூன்றாவது முறையாக இணையும் விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாகநடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
அரசியல் பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் கெட்டது பண்ணும் அரசியல்வாதிகளை தண்டிக்கும் பணக்காரராக விஜய் நடிக்கிறார். அரசியல்வாதிகளாக ராதாரவியும், பழ.கருப்பையாவும் நடிக்கிறார்கள்.
சென்னையில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த படப்பிடிப்பில் அரசியல் மாநாடு போன்ற காட்சியில், சமீபத்தில் குண்டுவெடிப்பு காட்சி ஒன்றை நள்ளிரவு படமாக்கி இருக்கிறார்கள்.
அந்த குண்டுவெடிப்பில் அரசியல்வாதி ஒருவர் கொல்லப்படுவது போல காட்சி அமைந்திருந்தது. மேலும் ஒரு மெலடி பாடலும் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
அதிரடி அரசியல் படமாக உருவாகும் இந்த படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ந்தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…