நடிகர் விஜயின் சர்கார் படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் ட்விட்டரில் துணிச்சலான சவால் விடுத்துள்ளனர்.நடிகர் விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி உள்ள படம் சர்கார். படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
மேலும் நடிகை வரலட்சுமி சரத்குமார், நகைச்சுவை நடிகர் யோகிபாபு,பழ.கருப்பையா , ராதாரவி என நடிக பட்டாளமே நடித்துள்ள இந்த படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் சர்கார் தீபாவளியன்று திரைக்கு வர இருக்கிறது. சர்கார் படத்தை இணையதளங்களில் வெளியிட கூடாது என்றும் நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று சன் நெட்வொர்க் நிறுவனம் சார்பில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தது. அந்த மனுவில் 3 ஆயிரத்து 710 இணையத்தளங்களின் பெயர்களை குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் காப்புரிமையை மீறி இந்த இணையதளங்களில் சர்கார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் இந்த இணையதளங்களை முடக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் கிருஷ்ண குமார் சுமார் 3715 இணையதளங்களுக்கு தடை விதித்ததோடு படத்தை இணையதளங்களில் வெளியிட நிரந்தர தடை விதித்தும் உத்தரவிட்டார்.
அதாவது இணையதளங்கள் சர்கார் திரைப்படத்தை வெளியிடுவது காப்புரிமை சட்டத்துக்கு எதிரானது என்று அதில் கூறப்பட்டுள்ளது.நாங்கள் படத்தின் ஹெச்டி பிரிண்டை வெகு விரைவில் வெளியிடுவோம் என்று தமிழ் மற்றும் படங்களை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்காருக்கு நேரடியாக சவால் விடுத்துள்ளது.
இந்த சவால் சன்பீக்சர்ஸ் நிறுவனம் எப்படி எதிர்கொள்ள போகிறது..?மேலும் இதற்கு முன்னதாக அந்நிறுவனத்திற்கு சொந்தமான சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பகீரங்கமாக தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.சர்கார் படக்குழுவுக்கு விடுக்கப்பட்டிருக்கும் இந்த சவால் முறியடிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
DINASUVADU
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…