விக்ரம் இயக்கத்தில் மூன்றாம் முறையாக இணைகிறார் சமந்தா….!!!
தமிழில் அலை, யாவரும் நலம், 24 உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்ரம் குமார். இவர் தெலுங்கில் இஷ்க், மனம், ஹலோ ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.
இப்பொது மீண்டும் அவர் தெலுங்கில் இயக்க போகும் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கிறார். ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த படத்தில் சமந்தாவை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
அவ்வாறு சமந்தா நடிக்க சம்மதித்தால், 24, மனம் ஆகிய படங்களுக்கு பிறகு விக்ரம் குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் மூன்றாம் படம் இதுவாகும்.