வாழ்ந்த இடத்தை விட்ட கபூர் குடும்பம்…!!! கண் கலங்கிய கபூர் :

Default Image

பாலிவுட்டின் முக்கியமான பெருமை வாய்ந்த திரைத்துறை குடும்பம் என்றால் அது கபூர் குடும்பம் தான். அந்தக் குடும்பத்துக்கு சொந்தமான 70 ஆண்டு கால பழைமையான R.K studio விற்பனைக்கு வருகிறது.
இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த R.K ஸ்டுடியோ ராஜ் கபூரால் ஆரம்பிக்கப்பட்டது. 70 ஆண்டு பழைமையான இந்த இடத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீ விபத்து ஏற்பட்டுப் பெரும் சேதமடைந்தது.
இந்த இடத்தை மறுபடியும் சரி செய்ய நிறையச் செலவு ஆகும் என்பதால் கபூர் குடும்பம் இந்தக் கஷ்டமான முடிவை எடுத்துள்ளது.

இது பற்றி கூறிய அந்தக் குடும்பத்தை சேர்ந்த பிரபல பாலிவுட் நாயகி கரீனா கபூர், அந்த இடம் தனக்கு மிகவும் பிடித்த மற்றும் நெருக்கமான ஒன்று என்றும் அவருடைய சிறு வயது நினைவுகள் நிறைய உள்ளது என்றும் கூறினார். இந்த முடிவு தனக்கு மிகவும் கஷ்டமான ஒன்று தான் என்றும் இருப்பினும் அவரது தந்தை மற்றும் குடும்பத்தின் முடிவு என்பதால் தன்னால் எதுவும் கூறமுடியாது என்று கூறினார்.
1948 இல் ராஜ்கபூர் பெயரில் அவரால் உருவாக்கப்பட்ட இந்த இடம் பல வெற்றிப்படங்களைத் தந்ததன் மூலம் அந்த ஊருக்கு ஒரு அடையாளமாக விளங்கியது குறிப்பிடதக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்