வரும் தேர்தலில் ரஜினிகாந்த் தமிழக முதல்வர், அடுத்த தேர்தலில் அவர் இந்தியப் பிரதமர்-நடிகர் ஜீவா..!
தமிழர்கள் தான் தமிழ்நாட்டை ஆழவேண்டும் என கூறி நடிகர் ரஜினிகாந்த்திற்கு எதிராக ஒரு சிலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அவர் தான் அடுத்த இந்திய பிரதமர் என பிரபல நடிகர் ஒருவர் பேசியுள்ளார்.
லொள்ளுசபா புகழ் நடிகர் ஜீவா தான் இப்படி பேசியுள்ளார்.
“150 தொகுதிகளில் தலைவருக்கு அமோக ஆதரவு இருக்கிறது, அவர்தான் அடுத்த முதல்வர் என்று ஒரு பிரபல நாளிதழே செய்தி வெளியிட்டுள்ளது. வரும் தேர்தலில் ரஜினிகாந்த் தமிழக முதல்வர், அடுத்த தேர்தலில் அவர் இந்தியப் பிரதமர்” என ஜீவா கூறியுள்ளார்.