வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இரும்புத்திரை இயக்குனர்!
விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான இரும்புத்திரை படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே இந்த படத்தின் இயக்குனர் பி எஸ் மித்ரன் அடுத்த படம் குறித்து சமீபத்தில் சில தகவல்கள் வெளியாகின.
பி.எஸ்.மித்ரன் அடுத்ததாக கார்த்தியுடன் இணையவிருப்பதாகவும், அந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது, இதுகுறித்து மித்ரன் அவரது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், இரும்புத்திரை படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியை தந்துள்ளது. தற்போது தான் எனது முதல் படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறேன். உடனடியாக எனது அடுத்த படம் பற்றி பேசுவது சரியாக இருக்காது. அடுத்த படத்திற்கான கதை தயாரான பிறகு, அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்