வடிவேலு நடிக்க தடையா..??
நடிகர் வடிவேலு நடிப்பதற்கு நடிகர் சங்கம் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்து ஹிட் அடித்த இம்சை அரசன் 23 புலிகேசி படத்தை தொடர்ந்து அதன் 2- ம் பாகத்தை இயக்க சிம்புதேவன் முடிவு செய்தார்.இம்சை அரசன் 24 – ம் புலிகேசி என்ற பெயரில் இப்படத்தை தயாரிக்க இயக்குநர் சங்கர் திட்டமிட்டார்.
மேலும் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க வடிவேலு ஒப்பந்தமானார். மேலும் படத்திற்காக பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டது. படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடைபெற படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.
வடிவேலுவின் இந்த நடவடிக்கையால் படத்தின் தயாரிப்பாளருக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் இப்பிரச்சனை முற்றி வடிவேலு நடிப்பதற்கு தடை விதிப்பது வரை சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்