ரோபோ சங்கர் வேண்டாம் என்று அடம்பிடித்தேன்! மாரி 2 விழாவில் தனுஷ் ருசிகர பேச்சு!!
Vநடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 21ஆம் தேதி பயங்கர போட்டியுடன் வெளியாகவுள்ள திரைப்படம் மாரி 2. இந்த படத்தை பாலாஜி மோகன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ் ருசிகரமாக பேசினார். அதில் , யுவன் சங்கர் ராஜா இல்லையென்றால் தானும், அண்ணனான செல்வாவும் நடுத்தெருவில் இருந்திருப்போம். மஅவரது இசைதான் எங்களுக்கு அடையாளம். மேலும், மாரி முதல் பாகத்தில் ரோபோ தான் வேண்டும் என்று இயக்குனர் கூறினார்.
அதற்க்கு தான் மறுத்ததாகவும், ஏனென்றால் அவரது உடம்பு சைஸ் பெரியது அவரை நான் அடித்தால் ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள் என கூறினேன். ஆனால் அதனை மக்கள் ரசிப்பார்கள் என கூறினார். மேலும். மற்ற நடிகர் நடிகைகளும் நன்றாக நடித்துள்ளதாக கூறினார். மேலும், டிசம்பர் 21 இல் வெளியாகும் மற்ற படங்களும் வெற்றியடைய வேண்டும் என கூறிவிட்டு சென்றார்.
DINASUVADU