ரெய்டு குறித்து பதிலளித்த விஜய் சேதுபதி..!!
தனது வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியதாக வெளிவந்த தகவல் குறித்து கேட்டதற்கு நடிகர் விஜய் சேதுபதி சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.
வருமான வரித்துறையினர் விஜய் சேதுபதியின் வீட்டில் ரெய்டு நடத்தியதாக வெளிவந்த தகவல் குறித்து கேட்டதற்கு விஜய் சேதுபதி காமெடியாக சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 96 படம் வரும் 4ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான சிறப்பு சந்திப்பு பத்திரிகையாளர் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, த்ரிஷா செய்தியாளர்களின் பல கேள்விக்கு பதிலளித்தனர்.
வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்ததாக வெளியான தகவல்கள் குறித்து கேட்டதற்கு பதிலளித்த சேதுபதி என் வீட்டில் ரெய்டு நடக்கவே இல்லை. எனது முகம் அடிக்கடி தெரிந்து கொண்டே இருப்பதால் , அதனால நான் சரியாக வரி கட்டுகிறேனா, கிரிடிட், டெபிட் கணக்கு எல்லாம் சரியா எழுதிருக்கேனா என்று பார்க்க வந்தார்கள்.
DINASUVADU