ரூ 25,00,000 நிவாரணம்…விஜய் சேதுபதி அறிவிப்பு…!!

Default Image
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ 25,00,000 நிவாரணம் அறிவித்துள்ளார்.
கஜா’ புயலால் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு தற்போது நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று, புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில்  கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நடிகர் சிவகுமார் குடும்பம் சார்பாக ரூ.50 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் தற்போது  நடிகர்  விஜய் சேதுபதியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண  பொருட்களை வழங்க உள்ளதாகஅறிவித்துள்ளார்.ஏற்கனவே திமுக 1 கோடி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU.COM

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்