ரூ 18,00,00,000 விற்பனை…திருமண புகைப்படங்களை விற்று சம்பாதித்த பிரியங்கா சோப்ரா…!!
தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ஹாலிவுட் படங்களிலும் நடிக்கிறார்.
பிரியங்கா சோப்ராவுக்கும், அமெரிக்கா பாப் பாடகர் நிக் ஜோனாசுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணத்துக்கு தயாராகி உள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ரா வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்கள் திருமணம் ஜோத்பூரில் அடுத்த மாதம் நடக்கிறது. 36 வயதாகும் பிரியங்கா சோப்ராவை விட நிக் ஜோனாஸ் 10 வயது குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்கு பிறகு பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் குடியேறுகிறார்.
இதற்காக அங்குள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் ஆடம்பர வீடு ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளனர். திருமணத்தை அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் திருமண உரிமை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்தை இருவரும் சமர்ப்பித்து உள்ளனர்.
இந்த நிலையில் திருமண புகைப்படங்களை பிரபல நிறுவனம் ஒன்று 2.5 மில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இந்திய பண மதிப்பில் சுமார் ரூ.18.25 கோடி ஆகும். திருமண புகைப்படங்களை இவ்வளவு பெரிய தொகைக்கு விற்றுள்ள பிரியங்கா சோப்ராவின் செயல் மற்ற இந்தி நடிகைகளுக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளது.
dinasuvadu.com