படத் தயாரிப்பு நிறுவனத்திடம் வாங்கிய ஐம்பது இலட்ச ரூபாய் முன்பணத்தை அக்டோபர் 31ஆம் நாளுக்குள் நடிகர் சிலம்பரசன் திருப்பிச் செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘பேஷன் மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் அரசன் என்கிற திரைப்படத்தில் நடிக்கச் சிலம்பரசனுக்கு முன்பணமாக, ஐம்பது இலட்ச ரூபாய் கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
ஒப்பந்தப்படி, சிலம்பரசன் செயல்படாததால் முன்பணத்தை வட்டியுடன் சேர்த்து வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், நடிகர் சிலம்பரசன் 85இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு நான்கு வாரங்களில் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஒப்பந்தத்தில் வட்டி செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடவில்லை என்பதால் உத்தரவை மாற்றியமைக்குமாறு சிலம்பரசன் சார்பில் கோரப்பட்டது. இதையடுத்து அக்டோபர் 31ஆம் நாளுக்குள் நடிகர் சிலம்பரசன் ஐம்பது இலட்ச ரூபாயைப் படத் தயாரிப்பு நிறுவனத்துக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். குறித்த நாளில் பணத்தைச் செலுத்தாவிட்டால் அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தார்.
DINASUVADU
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் தொடர் கைது நடவடிக்கை, மீனவ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும், எல்லை தாண்டி…
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க…
தெலங்காணா: கடந்த டிசம்பர் 4-ம் தேதி 'புஷ்பா 2' சிறப்பு காட்சியின் திரையிடலின் போது, சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட…
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…