ராதிகா ஆப்தே ரகசிய உளவாளியா..! திடிக்கிடும் தகவல்கள்..!

Default Image

நடிகை  ராதிகா ஆப்தே கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர். பாலிவுட் சினிமாவை சேர்ந்த இவர் சில ஹிந்தி படங்களில் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார். இது பெரும் சர்ச்சையானது.

இதனால் ஆவேசமான அவர் ஒரு கட்டத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஓப்பானாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அவ்வப்போது கவர்ச்சி படங்களை வெளியிடுவதில் அவருக்கு ஆர்வமும் இருந்து வருகிறது.

இந்நிலையில் இரண்டாம் உலகப்போர் 2 என படம் இயக்குகிறார்களாம். ஏற்கனவே ஹாலிவுட்டில் வேர்ல்ட் வார் 2 என படம் வெளியாகிவிட்டது. ஆனால் இப்படத்தை கொஞ்சம் வித்தியாசமான முறையில் தயாரிக்கிறார்களாம்.

இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டன் நாட்டின் ரகசிய உளவாளியாக இருந்தவர் நூர் இனாயத் கான். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது அப்பா இனாயத், மன்னர் திப்பு சுல்தானின் பரம்பரையை சேர்ந்தவராம்.

பிரான்ஸ் அரசு ஜெர்மன் நாட்டை தன்வசமாக்கிய போது வானொலி நிலையத்தில் வேலை பார்த்துக்கொண்டே நூர் ரகசியங்களை தெரிந்துகொண்டாராம்.

பின் இவர் உளவாளி என தெரிந்ததும் ஹிட்லர் படையினர் அவரை 1944 ல் சுட்டுக்கொண்டார்கள். அப்போது அவருக்கு வயது 30 என்பது தான் வரலாறு. இப்படியான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம் ராதிகா ஆப்தே.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்