‘ராட்ச்சசன்’ : ஒரு உண்மையின் கதை..!
நடிகர் விஷ்ணு விஷாலை வைத்து ‘முண்டாசுப்பட்டி’ இயக்கிய இயக்குநர் ராம் இயக்கத்தில் தற்போது ‘ராட்ச்சசன்’ படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
முதலில் ‘மின்மினி’ என பெயரிடப்பட்டு இருந்தது. அப்பெயரை ‘ ‘ராட்சசன்’ என படக்குழு மாற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
அமலா பால், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தியுள்ளது படக்குழு. முழுக்க த்ரில்லர் பாணியில் உருவாகும் கதையாகும். விஷ்ணு விஷால் காவல்துறை அதிகாரியாகவும், அமலா பால் ஆசிரியையாகவும் நடித்துள்ளனர்.
சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் ரசிகர் ஒருவர் ஒரு ட்விட் செய்தியிருந்தார். அதில் கூறியது : நீங்கள் காமெடி, மற்றும் பொழுதுபோக்கு படங்களை தவிர்த்து எமோஷனல் மற்றும் சமூக அக்கறை உடைய படங்களில் நடிக்கலாமே என்று கேட்டிருந்தார். அதற்கு நடிகர் விஷ்ணு விஷால் , ராட்ச்சசன்’ படம் நீங்கள் எதிர்பார்த்த படம் தான் என்று பதிலுக்கு டேவிட் செய்திருந்தார்.
Raatchasan comin real soon https://t.co/Gjq74v00Xp
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) July 11, 2018