ரன்பீர் கபூர் – ஆலியா பட் ஆகியோரின் காதல் விவகாரம் குறித்து மகேஷ் பட் என்ன கூறியுள்ளார் தெரியுமா…?
பாலிவுட்டில் பிரபலமான நடிகையான ஆலியா பட் என்பவரும், நடிகர் ரன்பீர் கபூர் என்பவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரியங்கா சோப்ரா அவர்களின் திருமணத்தை அடுத்து தொடர்ந்து சில பிரபலங்களின் திருமணங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களது காதல் பற்றியோ, திருமணம் பற்றியோ எந்த கருத்துகளையும் கூறவில்லை. இந்நிலையில் ஆலியா பட் அவர்களில் பெற்றோர் மகேஷ் பட் கூறுகையில், இவர்கள் இருவரும் காதலிப்பது உண்மை தான்.
ரன்பீர் கபூர் அவர்கள் ஒரு நல்ல மனிதர். இவர்களது திருமணம் குறித்து இவர்கள் தான் முடிவெடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.