ரஜினி, கமல் ரெண்டுபேரும் இப்பமாவது வயத்திறந்து பேசுங்க…காண்டாகும் பிரபல தயாரிப்பாளர்….
தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் திரையுலகத்தில் பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்த சூழ்நிலையில் ரஜினி, கமல் இருவருமே இதுபற்றி வாய் திறக்காமல் ஒதுங்கி இருப்பது ஏன்..?’ கேள்வி எழுப்பியுள்ளார்.
திரையுலக பிரச்னை விஸ்வரூமமெடுத்திருக்கும் இந்த சூழ்நிலையில், ரஜினி-கமல் இருவருமே இதுபற்றி வாய் திறக்காமல் ஒதுங்கி இருப்பது ஏன்..? என பிரபல தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி ஜே.சதீஷ்குமார் கூறியதாவது,
“ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வந்துவிட்டனர். ஆனால், அவர்களை ஏற்றிவிட்ட ஏணி இன்று சீக்கு வந்த யானையாக சின்னாபின்னமாகிக்கொண்டு இருக்கிறது. நீங்கள் மக்கள் சேவையை தாராளமாக செய்ய ஆரம்பியுங்கள். அதற்குமுன், உங்களை வளர்த்துவிட்ட இந்த திரையுலகத்தில் இப்போது பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அதை கண்டும் காணமல் இருப்பதேன்?திரையுலகப் பிரச்னைகள் தீர ஏன் குரல் கொடுக்க மறுக்கிறீர்கள்? திரையுலகத்தில் இவ்வளவு பிரச்னைகள் உள்ள இந்த சூழ்நிலையில் ரஜினி, ஆன்மிக சுற்றுப பயணமும், கமல் அரசியல் சுற்றுப் பயணமும் போயிருக்கிறார்கள்.
இந்த சமயத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் சில விஷயங்களை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.. தற்போதைய போராட்டத்தை வெறும் க்யூப், யு.எஃப் ஓ போன்ற டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டமாக மட்டுமே இல்லாமல்,திரைத்துறையில் இருக்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் ஆகியோரின் சம்பளத்தை கட்டுக்குள் கொண்டு வரும் போராட்டமாகவும் இது மாறவேண்டும்!
அதேபோல, சாட்டிலைட் உரிமையை யார் வாங்குகிறார்களோ அவர்களுக்கு மட்டும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், படங்களை ரிலீஸ் செய்வதில் ஒரு வரைமுறையை கொண்டு வரவேண்டும்.தியேட்டர்களில் நடக்கும் சில அடாவடிகளையும் நாம் கட்டுக்குள் கொண்டுவந்தே ஆகவேண்டும். இந்த பிரச்னைகளைஎல்லாம் இப்போது நடக்கும் போராட்டத்திலேயே சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொன்றுக்குமாக தனித்தனியாக ஸ்ட்ரைக் பண்ணவேண்டாம்” என்றார். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘தங்க மீன்கள்’ போன்ற படங்களை தயாரித்திருக்கிறார் ஜே.சதீஷ்குமார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.