ரஜினிகாந்த் தனது புதிய படத்தை ரிலீஸ் செய்வதற்கு கூட்டம் சேர்க்கவே ஏதாவது ஒன்றை சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார் என்று இயக்குநர் ஷக்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கமல், ரஜினி இருவரும் ஆட்சியை பிடிக்க நினைப்பது காமெடியாக உள்ளது என்று கூறினார்.
கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: ஜெயலலிதாவுக்குப் பிறகு முதல்வரும், துணை முதல்வரும் அதிமுகவை வழிநடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் கூறுவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். எப்படியாவது ஆட்சியைப் பிடித்து முதல்வராகிவிடலாம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். அதிமுக இருக்கும்வரை அது ஒருபோதும் நடக்காது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் புதிது புதிதாக கட்சி ஆரம்பித்து கொடியை அறிமுகப்படுத்துகிறார்கள்.
நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடிக்க நினைப்பது காமெடியாக உள்ளது. கமல் மைக்கை பிடித்துப் பேச தெரியாதவர். ரஜினிகாந்த் தனது புதிய படத்தை ரிலீஸ் செய்வதற்கு கூட்டம் சேர்க்கவே ஏதாவது ஒன்றை சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார். இந்நிலையில், இவர்கள் இருவரும் எப்படி ஆட்சியைப் பிடிப்பார்கள்? என்றார் ஷக்தி சிதம்பரம்.
DINASUVADU
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…