ரஜினி, அஜித், விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே அடித்த லக்….!!!
அஜித் – விஜய் மாஸ் நடிகர்களாக ஒரு இடத்தை பிடித்துவிட்டனர். அடுத்து வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திக்கேயனுக்கு தரமான சில படங்கள் கொடுத்து முன்னணி நடிகர்களின் அளவிற்கு பிரபலம் அடைந்துள்ளார்.
இவருடைய படங்களுக்கு இளைஞர்கள் மட்டும் இல்லது குடும்பங்களே வரவேற்கும். அதை அவருடைய படங்கள் வரும்போது திரையரங்கிற்கு சென்று பார்த்தால் தெரியும்.
அடுத்து இவரது நடிப்பில் சீமராஜ என்ற படம் வெளியாக இருக்கிறது. 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் இப்படத்தை போலந்து நாட்டிலும் வெளியிட படக்குழு இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையை எட்டியுள்ளார்களாம்.
இதற்கு முன் அங்கு ரஜினி, அஜித் படங்கள் மட்டும் தான் வெளியாகி இருக்கிறதாம். இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.