நடிகர் சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான படம் ‘தமிழ்ப் படம்’. இப்படம் ஹாலிவுட்டில் பெரிய நடிகர்களையும் அவர்களது படங்களையும் கலாய்க்கும் விதமாக எடுக்கப்படும் Spoof திரைப்படங்கள் பாணியில் தமிழில் முதன்முறையாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை கலாய்த்து எடுக்கப்பட்டது.
இப்படி ஒரு படம் தமிழ் சினிமாவிற்கு புதிது என்பதால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2017ம் ஆண்டின் இறுதியில் தமிழ்ப் படத்தின் இரண்டாம் பாகம் ‘தமிழ்ப் படம் 2.0’ பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. அதன் பிறகு இந்த வருட ஆரம்பத்தில் வெளியான தமிழ்ப் படம் 2.0 படத்தின் போஸ்டர்களில் அரசியல்வாதிகளையும் விட்டுவைக்காமல் கலாய்த்திருந்தனர். அவை சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாகின.கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.இதுவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.இதில் 20 படங்களுக்கு மேல் கலாய்த்தது தமிழ் படம் .அதில் ரஜினிகாந்த் நடித்த காலா,விஜயின் சர்கார்,அஜித்தின் விவேகம் உட்பட பல படங்கள் அடங்கும்.
இந்நிலையில் தமிழ்ப்படம் 2 படத்தின் தயாரிப்பாளருக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
காரணம் என்னவென்றால் தமிழ்ப்படம் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான Y NOT STUDIOS தயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதி பெறாமல் படத்தை வெளியிடும் தேதியை வெளியிட்டதாக புகார் எழுத்துள்ளது.இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தமிழ்ப்படம் 2 படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…