பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி இருவரும் ரஜினியின் மகன்களாக நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி நடிப்பில் ‘காலா’ மற்றும் ‘2.0’ என இரண்டு படங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருக்கின்றன. இதில், பா.இரஞ்சித் இயக்கியுள்ள ‘காலா’ படம், அடுத்த மாதம் 7-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. நானா படேகர், சமுத்திரக்கனி, ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், அருள்தாஸ், அஞ்சலி பாட்டீல், சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. விஜய் சேதுபதி ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார். ஜூன் 4-ம் தேதி முதல் டேராடூனில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. இதற்காக ஜூன் ஒண்ணாம் தேதியே படக்குழுவினர் இங்கிருந்து புறப்பட்டுச் செல்கின்றனர். கிட்டத்தட்ட 200 பேர் கொண்ட குழு இங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார்; திரு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில், ரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி இருவரும் நடிக்கின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பாபி சிம்ஹா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ படங்களில் நடித்தவர். ‘ஜிகர்தண்டா’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பாபி சிம்ஹாவுக்கு கிடைத்தது. சனந்த் ரெட்டி, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘மெர்க்குரி’ படத்தில் நடித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…