ரஜினியின் பெயரை மறந்த ஹிருத்திக் ரோஷன்…! ஹிருத்திக் ரோஷனை திட்டி தீர்த்த ரஜினி ரசிகர்கள் ..!

Default Image

பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினியின் பெயரை பதிவிடாததால் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.

ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அகபஷய்குமாரும் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை.

கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி ரஜினி நடித்த 2.0 திரைப்படத்தின் டீசர்  வெளியானது.
நேற்று  (நவம்பர்  3 ஆம் தேதி) சென்னையில் நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில்  2.0 படத்தின் டிரைலர்  வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் டிரைலர் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் 2.0 படத்தின் டிரைலர்  வெளியானது தொடர்பாக பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார்.அந்த பதிவில்,2.0 படத்தின்  டிரைலர் பார்த்தேன்.ஷங்கர் சார் சிறப்பாக செய்திருக்கிறார் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்
என்று சொல்லி அதில் இயக்குநர் ஷங்கர் மற்றும் அக்ஷய்குமார் ஆகியோரின் டிவிட்டர் முகவரிக்கு மட்டும் டக் செய்திருந்தார்.ஆனால் அதில் ரஜினி பெயரையோ ரஜினியின் டிவிட்டர் முகவரியையோ டக் செய்யப்படவில்லை. இதனால் ரஜினியை எப்படி மறந்தீர்கள்?  என்று ரஜினி ரசிகர்கள் கொதித்து வருகின்றனர் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்