ரஜினியின் சொத்து மதிப்பு வெளியீடு : இவ்வளவு இருக்கா?!

Default Image

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை தனது ரசிகர்களுடனான சந்திப்பின் போது உறுதி செய்துள்ளார். அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளார். நேற்று மாலை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தித்து பேசினார். இன்று எம்.ஜி.ஆர் பேரவை தலைவர் ஆர்.எம்.வீரப்பனை சந்தித்தித்து பேசினார்.
இந்நிலையில் பிரபலங்களின் சொத்து மதிப்பை கணக்கிட்டு சொல்லும் பின்-ஆப் ரஜினியின் சொத்து மதிப்பு, அவரது வாகனங்கள், அவர் கட்டிய வரி என அனைத்தையும் கணக்கிட்டு வெளியிட்டுள்ளது.
அதில் ரஜினியின் சொத்து மதிப்பு ரூ.360 கோடி எனவும், அவர் சென்ற ஆண்டு கட்டிய வரி மட்டும் ரூ.13 கோடி எனவும் தெரிவித்துள்ளது. மேலும் அவரிடம் ரேன்ஜ் ரோவர், பெண்ட்லி, இன்னோவா ஆகிய கார்கள் உள்ளன இதன் மதிப்பு ரூ.2.5 கோடி எனவும் தெரிவித்துள்ளது.  இவை அனைத்தும் ரஜினிகாந்தின் பெயரில் வரும் சொத்துக்கள், கணக்குகள், நிறுவனங்கள் மூலமாக கிடைக்கும் வருவாய் அடிப்படையிலானது. இதில் அவரது குடும்பத்தில் இருக்கும்  நபர்களின் பெயரில் உள்ள சொத்துக்கள் கணக்குகள் இதில் அடங்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்