ரஜினியின் அடுத்த படத்தின் ஹீரோயின் இவர்தானாம்..!!
ரஜினிகாந்த் நடிப்பில் காலா, 2.0 படங்களை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கும் படம் வெளியாகிறது. அந்த படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக கார்த்திக் சுப்புராஜின் நண்பரும் நடிகருமான விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த நிலையில் கார்த்திக் சுப்ராஜின் மற்றொரு நண்பரான பாபி சிம்ஹாவையும் நடிக்கவைக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
அதேபோல் ஹீரோயின் ரோலில் நடிகை சிம்ரனை நடிக்க வைக்க இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார். சிம்ரன் அஜித், விஜய், கமல், சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களோடு நடித்திருக்கிறார்.
ஆனால் ரஜினிகாந்துடன் நடித்ததில்லை. இதனால் நிச்சயம் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பார் என்று கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை முடிந்ததும் இந்த செய்தியை தயாரிப்பு நிறுவனம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்