ரஜினிக்கு பதில் கூறிய ஸ்டெர்லைட் நிர்வாகம் எனக்கும் பதில் சொல்லட்டும்…!கமல்ஹாசன் ஸ்டெர்லைட்டுக்கு சவால் …!
ரஜினிக்கு பதில் கூறிய ஸ்டெர்லைட் நிர்வாகம் எனக்கும் பதில் சொல்லட்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்தார்.
இதற்கு முன் ட்விட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் ட்விட்டரில் பதில் அளித்துள்ளது.
இதற்கு முன் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து நடவடிக்கை எடுக்காமல் அரசு வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனை வலியுறுத்தி கடந்த 47 நாட்களாக போராடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் நிலையில், தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராக உள்ளது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது இது குறித்து ஸ்டெர்லைட் நிறுவனம் கூறியது, எங்களது நிறுவனத்தை பற்றி தவறான, பொய்யான தகவல்கள் உங்களுக்கு தரப்பட்டுள்ளன. ஸ்டெர்லைட்டால் கேன்சர் வரும் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என ஸ்டெர்லைட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.ட்விட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் ட்விட்டரில் பதில் அளித்துள்ளது.இந்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனம் தங்களது ஆலையை வந்து பார்வையிடுமாறு ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் தற்போது ரஜினிக்கு பதில் கூறிய ஸ்டெர்லைட் நிர்வாகம் எனக்கும் பதில் சொல்லட்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்தார்.மேலும் கர்நாடக அமைப்புகளின் விளையாட்டோடு நான் விளையாட விரும்பவில்லை என படங்களை வெளியிட அனுமதிக்கமாட்டோம் என கன்னட அமைப்புகள் கூறியது பற்றிய கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.